கனவு நனவாக

என் மொழி ஆட்சி மொழி என்று

அரசாணை வெளியிட்டது

எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில்

 

ழகரம் யகர ஒலிப்பின்றித்

தமிழனின் நாக்கில் தவழ்ந்தது

தலை நகர் கிளை நகர் அத்தனையிலும்

தலைமையானதென் தமிழ் மொழி

 

வணிக மொழிகளில் கூட

வலிமையானது என் தமிழ் மொழி

வீதியில் நின்ற விவசாயிகள்

வீட்டுக்கு வந்தனர்

 

நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர்

நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர்

 

வழக்கு மன்றங்கள் எல்லாம்

வழக்கின்றி வலு விழுந்தன

காவல்துறை எல்லாம்

ஏவல் பணியைக் கைவிட்டனர்

 

போக்குவரத்து நெரிசல் இல்லை

போக்குவரத்துத் தடையும் இல்லை

போகும் வரும் அமைச்சர்கள்

 

கஞ்சி குடிக்கவும் கட்டித் தழுவவும்

ஆண்டுக்கு ஒரு முறை வந்த அமைச்சர்கள்

அனுதினமும் அன்போடு

 

பேதமே  இல்லாத சிறைச்சாலை

தண்டனைகள் தமிழில் பேசாவிட்டால்

தண்டனை அரசாணை

 

அரசுப் பள்ளியில் பயின்றவருக்கே

அரசுப் பணி முன்னுரிமை

தமிழர்கள் மட்டுமே தமிழ்நாட்டின் தலைவர்களாய்

 

எந்த மதத்தையும் இழிவாக

நினைக்காத மனிதர்கள்

சொந்த மதத்தை மட்டும்

உயர்வாக நினைக்காத மனிதர்கள்

 

கைகழுவச் சொன்னவர்களைக்

கைகழுவியதாய்க் கண்ட கனவு

மணியாட்ட சொன்னவர்களுக்கு

சாவு மணியடித்ததாய் கண்ட கனவு

 

தமிழில் பேசவில்லை என்றால் தண்டிக்கப்பட்டது

தமிழில் எழுதவில்லை என்றால் கை துண்டிக்கப்பட்டது

தமிழை வாசிக்கவில்லை என்றால்

வாழ்வாதாரம் வஞ்சிக்கப்பட்ட து

 

கல்வியும் மருத்துவமும்

உழவும்  அரசுடமையாக்கப்பட்டது

கள்ளுக்கடை ஒழிக்கப்பட்டது

பரம்பரை பாதுகாக்கப்பட்டது

 

வந்தாரை வாழவைத்த தமிழகம்

வலுவிழந்த தமிழனை வலுப்படுத்தியது

நெறி இறந்த தமிழனை முறைப்படுத்தியது

அடங்காத அனைவரையும் மண்ணில் சிறை பிடித்தது

 

முதியோர் இல்லங்கள் மூடப்பட்டன

இளையோர் எல்லாம் திருந்திவிட்டனர்

கையூட்டும் ஊழலும் ஒழிக்கப்பட்டன

பஞ்சமும் பட்டினியும் பறந்து போயின

 

இருப்போரும் இல்லாரும்

ஒன்றாய்க் கூடினர்

இருண்ட என் நாட்டை ஒளி ஏற்றினர்

வெளிச்சத்தைக் கண்டதும்

விடியலுக்காக விழித்தேன்

கண்ட கனவை நனவாக்க!

 

இவண் ஆற்காடு க குமரன் 9789814114