சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது.  இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான  விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்,  சாகித்ய  அகாதெமி, இனியேனும் தன்  போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :-

   தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழில் இந்நாள் வரை சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நூல்களின் பட்டியலைக் காண்போர் தமிழ்க் கவிதைக்குப் போதிய முதன்மை வழங்கப்படாததைக் காணலாம்.

   வாழ்வியல் விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கி மன்பprof.Maraimalai Ilakkuvanar02தைக் கலைகளுள் தலைமை தாங்குவது இலக்கியக்கலை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இலக்கியத்துள் தலைமை தாங்குவது கவிதை என்பதாகும். சிந்தனைப்போக்கையே வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் பெற்ற கவிதைக்கு முன்னுரிமையும் முதன்மையும் வழங்காத போக்கு சாகித்திய அக்காதெமியின் தமிழ்ப்பிரிவால் பின்பற்றப்படுகிறதோ என்னும் ஐயம் எழுகிறது. இனிவரும் ஆண்டிலாவது இப் போக்கினை மாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

   இவ்வாறு பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழ்க்கவிதைப் படைப்புகளைப் புறக்கணிக்கும் சாகித்ய அகாதெமிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.