தலைப்பு, தாலாட்டும் தமிழ்மொழி :thalaippu_thaalaatti_seeraattum_thamizhmozhi

அன்புப் பெற்றோர் ஆசையாய்க் குலவி
என்பிலும் உறைய ஊற்றிய மொழி
என் தமிழ் மொழி மனத்தில்
தேன் பாய்ச்சும் தினம்தினமாய்.

திக்குத் தெரியாத காட்டிலும் மனம்
பக்குப் பக்கென அடித்த போதும்
பக்க பலமாய் மரக்கலமாய் நான்
சிக்கெனப் பிடிக்கும் என் தமிழ் மொழி.

பிற மொழிக் கடலில் நான்
நிற பேதம், பல பேதத்தில் புரளும்
திறனற்ற பொழுதிலும் என் தமிழ்
பிறர் உதட்டில் தவழ்ந்தால் மனமுரமாகும்.

கைகாட்டி, நீர்த் தெப்பம், வாழ்வின்
வழிகாட்டி என்று என்னை நிதம்;
தாலாட்டி மகிழ்வில் நாளும்
சீராட்டும் என் தமிழ் மொழி.

கூன் விழாத மொழி, புலத்தில்
ஏன், வீணென்;பாரும் உண்டு. – முதுகு
நாண் போன்ற தமிழ் தமிழனுக்கு.
தன்மான அடையாளம் என் தமிழ் மொழி.

வேதா,இலங்காதிலகம் - vetha_elangathilagam02

  -வேதா. இலங்காதிலகம்.
ஓகுசு, தென்மார்க்கு

21-02-2008

முத்திரை,வேதாவின்வலை - muthirai_vedhavinvalai