சுடும்! சுடும்! சுடும்!

சுடும் சுடும்
நீரும் சுடும்
நெருப்பும் சுடும்
நேர் நேர் நின்றால்
நட்பும் சுடும்!
வாயும் சுடும்
வரவும் சுடும்
வரம்புகள் மீற
நிழலும் சுடும் !
காற்றும் சுடும்
கவிதைகள் சுடும்
கசடரைப் பார்த்தால்
நெஞ்சும் சுடும் !
பூவும் சுடும்
பொழுதும் சுடும்
பொதுவில் நில்லா
மன தைச் சுடும் !
அன்பும் சுடும்
ஆசையும் சுடும்
அழகே இல்லா
நடையும் சுடும் !
சுடும் . சுடும் .
போரும் சுடும்
பொழுது போக்காய்
செய்வது சுடும் !
அறமும் சுடும்
அறிவும் சுடும்
அன்பே இல்லா
பொருள்கள் சுடும் !
வேதனை சுடும்
வீழ்ச்சிகள் சுடும்
வெல்ல நினைத்த
நினைவுகள் சுடும்!
சுடும் .. சுடும் ..
துன்பங்கள் சுடும்
துய்க்க மறந்த
இன்பங்கள் சுடும் !
சுடும் ! சுடும் !
வெறுப்புகள் சுடும்
வேதனை செய்யும்
விளக்கங்கள் சுடும் !
நீரும் சுடும்
குளிரக் குளிர..
நெருப்பும் சுடும்
எரிய.. எரிய..!
அதையும் சுடும்
அணைக்கின்ற கரமே
அதனால் சமைக்கும்
உறவென்ற வளமே!

பாவலர் மு இராமச்சந்திரன்