செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்!
செம்மொழி பேசும் பெருமை பெற்ற,
நம்மினம் அறிவில் வறுமை உற்று,
ஐம்புலன் கருகி ஆற்றல் இழந்து,
பொம்மையைப் போலப் பேசாமல் இருந்து,
செம்மறி ஆடாய்ச் செத்தது போதும்!
இம்முறை யாவது சிந்தனை செய்து,
சிம்மம் போலச் சீறி எழுந்து,
செம்மை மிகுந்த தலைவன் கையில்,
நம்தமிழ் நாட்டின் ஆட்சியைக் கொடுப்போம்!
Leave a Reply