தனிப்பெருமை பெண்மையே!

தன்முகம் மறந்து

பன்முகம்

 

உள்ளும் வெளியும்

உலகையாளும்

 

இல்லையேல்

இல்லை

வயிற்றுக்குள்

வைத்துவுயிர்ப்பிக்கத்

தன்னுயிரை

தனிவுயிராய்த்

தரணிக்களித்த

தாரகை!

 

முத்துக்குள் சிப்பி

வைரத்துக்குள் மண்

பிறக்கும் முன்னே

உறவாடும்

உலகில் ஒரே உயிர்!

 

அகத்தில் வைத்து

முகம் பார்க்கும்

அழகி!

 

உறவுகளை

உயிர்ப்பித்து

உலகை உருவாக்கும்

உயிர்!

 

ஒருமையைப்

பன்மையாக்கும்

தனித்தன்மை

தனிப்பெருமை

பெண்மையே!

 

இவண்
ஆற்காடு.க.குமரன் – 9789814114