தமிழர் என்பதாலே இந்தச் சோதனை! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழர் என்பதாலே இந்தச் சோதனை!
யாதுமாகி நின்றே நம்தமிழை
எங்கு நிறையச் செய்வோம்
சூது அலட்சிமாய், இந்து அரசு
செய்யும் சூழ்ச்சி அன்றோ?
மோதும் பகைமை எல்லாம் நாம்
தமிழர் என்பதால் அன்றோ ?
நீதி நேர்மை எல்லாம் இந்தியர்
கீதை ஏட்டில் மட்டும்தானே !!
இந்தி புகுத்தி விட்டார் – இவர்
சூதுநிறை மதஆட்சியாலே ;
மந்திகள் ஆடவிட்டார் அவரை
மந்திரி என்ற பெயராலே
குந்தி மைந்தர் என்பார்; இவர்
கோசலை குமரென்பார் ;
விந்தியமலைக்கீழேஇருக்கு நமை
வேற்றுகிரக மக்களென்பார் ;
இராம பூமியென்பார்- நம்மை
இராவணக் கூட்டமென்பார்
பிராமண வகுப்பினரை உயர்
இருக்கையில் அமர்த்திவிட்டுப்
போனபிறவி முன்னோர்செய்த
புண்ணியமென நம்பவைத்து
இன்னும் நம்இல்ல நிகழ்வுகளில்
நாம்இழிகுலம் எனவே வருவார்
தில்லியில் உழவர்காணமாட்டார்
தனிவானூர்தி உலகு காணுவார்
கொல்லையில் அசிங்கப் பட்டினி
ஆயிரமிருக்க அடையாளமில்லா
ஏழை நாடுகளுக்கு அள்ளித்தரும்
வள்ளலென யாரப்பன் காசதோ ?
எம்முழவர் ஆடையில்லாமல் ஓடிட
மானமிகு அரசெனில் மடியலாமே .
இராமன் பேசிய இந்திமொழியோ?
கிருட்டினன் ஆடிய இந்தியோ?
சீதாதேவி பாடியது சமசுகிருதமோ?
சிவன் காளி ஆடியது இந்தியோ?
வேங்கடனுக்குத் தெரிந்தது இந்தியோ
வினாயகர் பேசியது சமசுகிருதமோ?
எம் பசிக்குத் தேவை சோறும் நீரும்;
எம்மானத்துக்கு ஆடையும் தமிழும்!
Leave a Reply