eezham-genocide34

விளைந்த வயல்களில் வேர்களும் இல்லை
வியர்வை சிந்தி உழைத்தவர் தடயமும் இல்லை
மழைத்தூறல் பட்டால் eezham-genocide35
மனம்கூட நிறைத்திடும் மண்வாசம்
கொஞ்சமதைத் தோண்டினாலும்
சற்றே பிணங்களின் படையெடுப்பு

வீதிவழி கெந்தியாடிய சின்னஞ்சிறார்
கையில்லை காலில்லை ஊனமானார்
பட்டுச்சரிகையில் சொலித்த எம் ஈழத்தாய்
விதைவைக்கோலம் தரித்தின்று மௌனித்தாள்

காலகாலம் ஆண்டுவந்த எங்கள் பூமி
போர்க்களமாய் மாறி நிலைகுலைந்ததின்று
தமிழர் என்ற கோர்வைக்குள் நாமின்று
தனித்தனியே செல்வதால்தான் பயனுமென்ன?

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வேங்கை
ஒன்றுதிரண்டால் போதும் காரிருளும் கலைந்தோடும்!
ஒருவழி தமிழ்வழி நின்றிருந்தால் போதும்
ஓடி ஒழிய பகைவர்க்கு வழியொன்றும் இருந்திடாது!

நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=212221