தமிழா படி! தமிழில் படி! – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தமிழா படி! தமிழில் படி!
படி… படி
முயன்று படி முன்றேனப் படி!
முப்பால் படி!
படி… படி
ஆழ்ந்து படி! ஆய்ந்து படி!
அறம் படி!
படி… படி
பொதுமை படி! புரட்சி படி!
பொருள் படி!
படி… படி
இனிது படி! இயற்கை படி!
அகம் படி!
படி… படி
புரிந்து படி! புரியப் படி!
புறம் படி!
படி… படி
நன்றாய்ப் படி! நயமாய்ப் படி!
நாலடி படி!.
படி… படி
நிறையப் படி! நிறைவாய்ப் படி!
நீளப் படி!
படி… படி
தேர்ந்து படி! தெரிந்து படி!
தெளிந்து படி!
படி… படி
ஊக்கப் படி! ஊக்கிப் படி!
உடனே படி!
படி… படி
உயரப் படி! உயர்ந்து படி!
உண்மை படி!
படி… படி
சுவைத்துப் படி! சுவைக்கப் படி!
சூழ்ந்து படி!
படி… படி
கசடறப் படி! கற்பவை படி!
காலம் படி!
படி… படி
இலக்கணம் படி! இலக்கியம் படி!
இன்றே படி!
படி… படி
தமிழைப் படி! தமிழில் படி!
தமிழா, படி!
– புதுவைத் தமிழ்நெஞ்சன்
Leave a Reply