தமிழைப் போற்ற வாருங்கள்!

 

அண்ணா! அக்கா! வாருங்கள்!

பள்ளி செல்வோம் வாருங்கள்!

பாடம் படிப்போம் வாருங்கள்!

பாரில் உயர்வோம் வாருங்கள்!

 

அண்ணா! அக்கா! வாருங்கள்!

பள்ளி செல்வோம் வாருங்கள்!

கலைகள் பயில்வோம் வாருங்கள்!

களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!

 

அண்ணா! அக்கா! வாருங்கள்!

பள்ளி செல்வோம் வாருங்கள்!

ஒன்றாய் ஆட வாருங்கள்!

நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!

 

அண்ணா! அக்கா! வாருங்கள்!

பள்ளி செல்வோம் வாருங்கள்!

நாளும் அறிவோம் வாருங்கள்!

நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!

 

அண்ணா! அக்கா! வாருங்கள்!

பள்ளி செல்வோம் வாருங்கள்!

தமிழைப் படிப்போம் வாருங்கள்!

தரணியில் நிமிர்வோம் வாருங்கள்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்

( ‘twikle twinkle little star’ மெட்டில்)

முல்லைச்சரம், சூலை 2019, பக்கம் 42