‘‘தாய்மொழி விழிப்புணர்வு’’ – கவிஞர் சொ.நா.எழிலரசு
தமிழே குறி
குறளே நெறி
தமிழா! அறி
தமிழுக்கு முதல் அகரம்
தனிச்சிறப்பு
ழகரம்
ழகரம் பேசு
சிகரந் தொடும்
பேச்சு
பிழையாகப் பேசாதே
களையெனத்
தழைக்காதே
தமிழுடன் ஆங்கிலம்
சோற்றுடன் கல்
நீக்கிடு
தனித்தமிழ் பேசு
தமிழே நம்
மூச்சு
தமிழ்ப் பேசா வாய்
தாங்கிடும் மெய்
பொய்
தமிழ் வாழ வாழ்
தவறினால் தமிழ்
பாழ்
கவிஞர் சொ.நா.எழிலரசு
செயலர், பொதுச்செயலர்,
தனித்தமிழ்ப் பயிற்றகம், தமிழ் ழகரப்பணி மன்றம்,
துரைப்பாக்கம், சென்னை.
Leave a Reply