52.natramizh

நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம்
நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம்
நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே!

நாம் படிப்போம் தமிழைப் படிப்போம்
நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம்
நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே!

நாம் கேட்போம் தமிழைக் கேட்போம்
நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம்
நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே!

நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம்
நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம்
நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே!

நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம்
நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம்
நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png– யாழ்ப்பாவாணன்