‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா
‘நாங்கள்’
புசிப்பது தசை
புணர்வது பிணம்
முகர்வது இரத்தம்
நாற் சுவர்களுக்குள்
நடப்பதை
நாற்சந்தியில் நடத்துவோம்
அது ‘தாரமாக’ இருந்தாலும்,
மூலை முடுக்கெல்லாம்
தேடி ஒதுங்கமாட்டோம்
‘தங்கை’ ஒருத்தி இருந்தால்
அம்மணமாக்கி இரசிப்போம்
‘தோழி’ ஒருத்தி கிடைத்தால்
அதிரப்புணர்வோம்
நண்பர்கள்
குழுவாகச் சேர்ந்தால்
‘தாயையும்’ கூட்டாகப்
புணர்வோம்
‘அக்காளை’
நீலப்படம் எடுத்து
காசு பார்ப்போம்
‘நாங்கள்’ யார்?
பிரித்தானியாவின்
‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால்,
எங்கள் ‘குலம் கோத்திரம்’
பற்றியெல்லாம்
உங்களுக்குச்
சொல்ல வேண்டியதில்லை!
- தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா
(இலங்கை, முல்லைத்தீவிலிருந்து)
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
wetamizhar@gmail.com
eezhamcitizen@gmail.com
Leave a Reply