pen01

தமிழ்வாழ்த்து


எல்லையை இழந்தாய் வாழ்ந்த

இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று

முல்லையும் இழந்தாய் எங்கள்

முத்தமிழ்த் தாயே என்றும்

தொல்லையில் கிடந்தும் வீரத்

தோள்தனைத் தூக்கி நின்றாய்

இல்லையே சங்கக் காலம்

ஏங்கினேன் தமிழே வணக்கம்.

அவை வணக்கம்

கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை

பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை

பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை

இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை

தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை

பொன்னகராம் புதுநகராம்

வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்

மின்னரகராம் தொழில்கள் கலைகள்

எல்லாம் வளர்கின்ற இந்நகரை

எந்நகரம்? என்போர்க்கு

என் நகரம் என் நகரம்

என முழக்கி இறுமாப்பு கொள வைக்கும்

நன்னகராம் மும்பை முதுநகரில்

பெண் பெயரில் கவியரங்கம்

549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)

அது முதலாம் தமிழ்ச்சங்கம்

59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)

அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்

49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)

அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்

இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்

இது நான்காம் தமிழ்ச்சங்கம்

ஞாயிறு தமிழ்ச்சங்கம்

ஞாயிறு

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்

தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் – ஞாயிறு

இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல

அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல

அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல

அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு

ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்

நாளுக்கு முகவரிதான் விடியல்

நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்

வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)

வெற்றிக்கு முகவரிதான் சூடும் வாகை

தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து

தமிழுக்கு முகவரிதான் கவிதை

கோளுக்கு முகவரிதான் ஞாயிறு – மும்பைக்

கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி

யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு

வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்

பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்

யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்

நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி

(தமிழையும் தமிழர்களையும்)

சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்

இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு

அடர்த்தியான பெயல்

அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்

ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்

இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்

இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்

இவர், மின்னலை வானில் ஏற்றுவார்

வேர்களை மண்ணில் இறக்குவார்

மரங்களைப் பேச வைப்பார்

மயில்களை நடனமாட வைப்பார்

மொத்தத்தில்

இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்

தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்

தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்

இராமாயணப் போர் 18 மாதங்கள்

மகாபாரதப் போர் 18 நாட்கள்

சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை

புராணம் 18

உப புரானம் 18

மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18

ஐயப்பன் கோவில் படிகள் 18

அட்டபதி 18

கணங்கள் 18

ஆடிப்பெருக்கு 18

சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை

இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18

பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்

குவிந்திருக்கும்

கவியார்வலர்களுக்கு இந்தக் கவியின்

கனிந்த வணக்கம்

இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்

உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார சொற்களால்

கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்

இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்

இதயங்கள் இனிப்பாகட்டும்

பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை

கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்

 

முதுமக்கள் தாழியிலிருந்து

வெளியில் வா

இட்டலிக்கு

ஊற வைத்த அரிசியை

உப்பரிகையில்

உலர வைத்த துணிமணியை,

கோபத்தில்

காய வைத்த கணவரை

குழந்தைகளின் கத்தலை

மாமியாரின் குத்தலை

பேச மறந்த அம்பலை (வம்பினை)

பூசமறந்த முகப்பூச்சினை

தொலைக்காட்சித் தொடரினை

சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்

உங்கள் நினைவுகளிலிருந்து

செவிகளையும் சிந்தையையும்

கொடுங்கள் என் கவிதைக்கு

உற்பத்தி உலகே நீ

ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து

சாம்பல் ஆனாய்

உலகின் ஆதிமூலமே நீ

தொட்டில் பணி ஒன்றே சுகமென்று

கட்டிலில் முடங்கிப் போனாய்

படைப்புக் கணிதத்தில்

வருக்கமூலம் நீ

அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்

குறியாய் அடங்கிப் போனாய்

கருப்பத்தில் நிருமூலம் ஆகாமல் தப்பித்த

இரசமூலம் நீ

(பாதரசம்) நீ

சொற்பத்தில் மதிமயங்கி மண்ணோடு

மண்ணாகி மட்கிப் போனாயே

படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்

பருத்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்

ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?

கொதி! கொதித்தெழு! கொப்பளி!

புலிப்பல் தாலி என்றார்

ஐம்படைத் தாலி என்றார்thaali02

ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி

அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்

குதி, வேலி தாண்டு, குதித்தோடு

ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு

சங்கமத்தில் சரிபாதி நீ

உனை அகத்துறையில் மூழ்கடித்து

குங்குமத்தில் அடைத்து விட்டார்

முடி.. மோகக்கதையை முடி!thaali01

நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!

மூடிக்கிடக்கும்

முதுமக்கள் தாழியிலிருந்து

வெளியில் வா

அந்த முதுமை கள் தாழியிலிருந்து

முண்டியடித்து வெளியில் வா

காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக

உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு

கேள்வி கேள்

சாதனையின் திறவுகோல் எது என்று

வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை

உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்

கங்குலை உடை!

தூள் தூளாக்கு!

உனை இருளில் தள்ளிய

காலத்தின் முகத்தில்

அக் கரியைப் பூசு!

வீரம் கொள்!

மீசையில்லையே என்று வருந்தாதே

புருவங்களை முறுக்கு!

விழி! விழிதிற!

கனன்று எரியும் உள்ளத்தை வெளித்தர

தொலைதுரக் கனவு காண்

உன் கனவுகளைக் கலைப்போரை

கனலாட்டு விழிச் சுடராலே

இனியும் இருட்டுத் தெருவில்

இருந்து உலவாதே

வெளிச்ச பவனி வா

பவனி முடியும் நாளில்

பெண்ணுக்கே கொடையாக்கு

அந்த வீர விழிகளை

33, 33 என்று

விழுக்காடு கேட்டுப் புலம்பாதே

அரை வேக்காடா நீ

எடுத்துக் கொள் 100 விழுக்காடு

எதிர்ப்பவர்களை விழுக்காட்டு

எரியும் தணலில்

சேலைக்கடையில்

நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே

நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்

எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ

கடுந்தவம் செய்

பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்

பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே

பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்

உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்

உருப்படுமா இந்தியத் தேசம்

சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்

ஈழக் கனவை எப்படி முடிப்பது

ஏதாவது செய் உன்னாலும் முடியும்

பாலுக்கழும் பருவமா உன்னது

பால்மணம் மாறா மழலைகள்

மடிந்தை மறக்க முடிந்ததா

மங்கையே உன்னால்

காவிரி ஓடம் தமிழ்க்கரையேற

ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?

ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்

அதுபோதுமென்று இருந்துவிட்டாயே

விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக

எப்போதாவது போராடினாயா

எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?

போதையில் இளைஞர் களிக்கின்றார்களே

வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?

வீதியில் இறங்கிப் போராட வேண்டாவா?

அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா

அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?

எரியில் மூழ்கிய இருநாடு பற்றி

ஏட்டில் படித்தது நினைவில் ஆடுதே

ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்

ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை

ஒதுங்கிப் போவதற்கா வாக்கு அளித்தாய்

தீட்டுப் பற்றிப் பேசுகின்றாயே

தீண்டாமைத் தீயில் கருகிய காதலர்

எத்தனை முகமென்று கணக்கெடுத்தாயா?

அடுப்பை மாற்றுவது

நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது

அதிட்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)

வாஃச்து பார்த்து பல்வரிசை மாற்றுவது

எல்லாவற்றையும் மாற்றிவிடு

தொப்புள்கொடியைத் தேசியக்கொடி ஆக்கு

திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு

உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டிக்கொள்

கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு

உறுப்புதானே

பிறப்பில் வேறுபாடு இல்லை…

வெற்றி பெறு!

 

aathirai-mumbai01மும்பையில்  கவிஞர் ஆதிரை பானுமதி 

முழங்கிய ஞாயிறு அமைப்பின்

கவியரங்கத் தலைைமைக் கவியுரை