புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43
(இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
6. தாய்மொழிப் படலம்
41. தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர்
வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத்
தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும்
திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர்.
42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய
அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும்
வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந்
தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே.
43. அந்நிலை யிருந்தநம் அருமைத் தாயயல்
மன்னவ ராட்சியால் வடவர்ச் சேர்ந்தவன்
தன்னைநேர் தமிழரால் தமிழ ரல்லரால்
இந்நிலை யடைந்தனள் இன்னு மென்கொலோ.
(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை
குறிப்பு: 43. வடவர்ச்சேர்ந்தவன் – பீடணன்
Leave a Reply