(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

2. தமிழகப் படலம்

பெருவளநாடு

11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும்

செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய

பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு

மன்மலை யாத மணிமலை யோங்கும்.

12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி

முத்தமி ழாளர் முதுநெறி போலப்

பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு

புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும்.

13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும்

நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில்

பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு

பெய்வளம் பட்டுப் பெருகியே சென்ற.

14.இன்னு முகிலின மேயபல் குன்றுந்

துன்னுபல் லாறுந் தொகுவளஞ் செய்ய

என்னிலை யென்றவ் விருநில மங்கை

மன்னு பெருவளம் வாய்ந்து பொலிந்தாள்.

தென்பாலி

15.அப்பெரும் பஃறுளி யாற்றின தெற்கில்

திப்பிய தென்கடல் தெற்கின தாகக்

கப்பிய பல்வளங் காமுற யாரும்

நப்புகழ் மேயதென் பாலி நளியும்,

+++

  1. நொய்–மென்மை . பை-பசுமை, அழகு.

பெய்வளம்-மழைவளம்,

14, ‘என் நிலை’–தருக்குச் சொல்.

  1. ந – சிறந்த. நளியும் – பரந்திருக்கும்.

+++

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை