பொய் சொல்ல மாட்டேன்!

 

பொய் சொல்ல மாட்டேன்!

பொய் சொல்ல மாட்டேன்!

கையில் எதுவும்

கிடைக்கும் என்றாலும்

பொய் சொல்ல மாட்டேன்!

பொய் சொல்ல மாட்டேன்!

 

பொய் சொல்ல மாட்டேன்!

பொய் சொல்ல மாட்டேன்!

மெய்யின் வழிதான்

மேன்மை, எனவே

பொய் சொல்ல மாட்டேன்!

பொய் சொல்ல மாட்டேன்!

 

-சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள் : பக்கம் 28