மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள்

கோடை விடுமுறைக்

கொண்டாட்டங்கள்

மகுடை(கொரோனா) விடுமுறைத்

திண்டாட்டங்கள்

அலுவலகம் செல்லாமல் அறையில்

முடங்கிக் கிடக்கும் அப்பா

அடுப்பங்கரையில் விடுமுறை இன்றி

உழைத்துக் கொண்டிருக்கும் அம்மா

ஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி

தேர்வு தொலையட்டும் என

வேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள்

வெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம்

முடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி

சிறகின்றிப் பறக்கும் கிருமி

சிறையில் மக்கள்

விடுமுறையிலும்

ஒவ்வொரு வீடும்

உயிர் விலங்குப் பூங்கா

காப்பாற்றச்சொல்லிக்

கதறினோம்

கை கழுவி நகர்ந்தது

அடுத்த அவசரச் செய்தி

கோடைக் காலம் தொடங்கியது

நீரை வீணாக்காதீர்!

இவண்

ஆற்காடு க குமரன் 9789814114