மனிதம் – கமலா சரசுவதி
மனிதம்
தலை சுமந்து உயிர்காக்கும்,
தன்மையது நல் மனிதம் !
உயிர் கொடுத்து உயிர்காக்கும்,
உணர்வே நல் மனிதம் !
செருக் கொழிக்கும் சிந்தையது,
சிகரம் கொள்ளும் மனிதம் !
முருகவிழும் மொட்டுப் போலே
முகிழும் மனங்கொள் மனிதம் !
துயரம் நிறைந்தோர் துயரேதீர்க்க,
துடிக்கும் மனமே மனிதம் !
தோல்வியுற்றோர் துவளா நிலையைத்
தோற்றுவித்தல் நல் மனிதம் !
வீட்டுப்பெண்கள் கொண்ட கருத்தை
விரும்பிக் கேட்டல் மனிதம்!
கொல்லும் பகையே என்றபோதும்,
கொஞ்சம் மன்னித்தல் அதுமனிதம் !
– கமலா சரசுவதி
[படஉதவி: பர்த்துகதோகர் (https://www.etsy.com/shop/parthkothekar)]
Leave a Reply