மழலைப்பள்ளி செல்லுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

மழலைப்பள்ளி செல்லுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

பாட்டு படிக்கச் செல்லுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

கதை கேட்கச் செல்லுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

பறவைகள் பெயர்கள் கேட்டிடுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

விலங்குகள் பெயர்கள் தெரிந்திடுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

அகர வரிசை அறிந்திடுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம்!

 

செல்லுவோம்! செல்லுவோம்!

மழலைப்பள்ளி செல்லுவோம்!

மனம்மகிழ்ந்து திரும்புவோம்!

மற்றவர்க்குச் சொல்லுவோம்!

 

 – இலக்குவனார் திருவள்ளுவன்