அட்டை-மெய்யறம் : attai_meyyaram

மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்

ஆணும் பெண்ணும் அது செயவுரியர்

இளமைப் பருவம் இயைந்ததற்கே

மற்றைய பருவமும் வரைநிலையிலவே

அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்

அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்

தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்

தக்க ஆசிரியரால் இன்னியலறிதல்

ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்

இறைவன் நிலையினை எய்திட முயறல்

மாணவரியல், மெய்யறம்:

ஈகச் செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)

va.u.chithambaranar02