தலைப்பு-மீண்டும் மீண்டும் -ஏர்வாடி : thalaippu_meendummeendum_erwadiradhakrittinan

மீண்டும் மீண்டும்

கொடிகளோடு கூட்டமொன்று
வரும் வரும்- தாம்
கொண்டு வந்த பரிசுகளைத்
தரும் தரும்

கால்களிலே கைகளிலே
விழும் விழும்- நம்
கதவு தட்டிக் கைவணங்கித்
தொழும் தொழும்

அவ்வப்போது கொள்கைகளை
விடும் விடும் – அது
அரசியலில் இயல்பென்று
கதை விடும்.

ஐந்தாண்டுக் கொருமுறைதான்
தேர்தல் வரும்-பாவம்
அன்று நமது அறிவில் இடி
விழும் விழும்.

தவறு செய்து விட்டதாகத்
தெளிவு வரும்- அந்தத்
தவற்றை மீண்டும் செய்ய அடுத்த
தேர்தல் வரும்….

ஏர்வாடி இராதாகிருட்டிணன்

ervadi rathakrittinan01