மே நாள் – கோவைக்கோதை
மே நாள் – கோவைக்கோதை
உழைப்பின் ஊதியம் இளைத்தது.
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்.
களைப்பில் மனிதர் வளைந்தனர்.
சளைக்கவில்லை பலர் விழித்தனர்.
நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர்.
விளைந்தது போராட்டம் – குதித்தனர்.
சிக்காகோ நியூயோர்க்கு பாசுடனீறாக
அக்கிரமம் அழிக்கத் திரண்டனர்.
நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை.
உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி.
உழைக்கும் நேரம் எட்டுமணியாக
உரிமையைப் போராடி வென்றனர்.
தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச
தொழிலாளர் நாளானது மே ஒன்று.
எப்போதும் பணத்தில் குறியானவர்கள்,
தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள்,
எப்போது தானாகத் திருந்துவார்கள்,
அப்போதன்றோ பலருக்கு மே நாள்!
கோவைக்கோதை
காண்டிநேவியன்
2-4-2009
Leave a Reply