வாக்காளர் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்
வாக்காளர் ஆத்திசூடி
அளவிலா மதிப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்களிப்பீர்!
ஆற்றல் மிக்கவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பீர்!
இன்னலைத் துடைக்க வருவோரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஈடிலாச் சிறப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவீர்!
உங்களுக்காக உழைப்பவரைத்தேர்ந்தெடுப்பீர்!
ஊக்கமுடன் செயல்படுவோரைத் தேர்ந்தெடுப்பீர்!
எளிமையைக் கடைப்பிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஏற்றம்தரும் வல்லவரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஐந்தாண்டுகளுக்குப் பொறுப்பானவரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஒற்றுமைக்கு வழிவகுப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஓங்குபுகழ் தருபவரைத் தேர்ந்தெடுப்பீர்!
ஓளவியம்இல்லாதாரை(ஏய்க்காதவரை)த் தேர்ந்தெடுப்பிர்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
[வாக்காளருக்கான வேண்டுகோள் முழக்கங்கள் ஆத்திசூடி என்னும் பெயரில் தரப்பட்டுள்ளன.]
Leave a Reply