வா, தமிழா! தமிழா!

 

வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்

வாளெடுத்து வா தோழா
அந்தப் பகையை வென்று முடிப்போம்
தோள்கள் சேர்த்து வா தோழா
நம் தேசத்தைக் காத்திடுவோம்
எமனையும் கண்டு அஞ்சோம்
பனங்காட்டுப் புலியிது என்போம்
நெற்றியில் இந்த மண்ணை
நாம் திலகமாகச் சுமந்திடுவோம்

வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்

ஆயிரம் நாடுகள் அன்று
நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே
தீரத்துடன் நாம் நின்று
இனி வெல்லப்போவது புதுக்கதையே
தமிழா தமிழா உன்னை
வென்றிட இங்கே யாருமில்லை
உறவே உறவே உன்னைக்
காத்திட எம்போல் யாருமில்லை

வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்

எத்தனை எதிர்ப்புகள் வரினும்
நாம் வெல்லப் போவது உண்மை
யுத்தங்கள் செய்து காப்போம்
எந்தப் புத்தன் வந்தாலும் கேளோம்
வாழுகையில் வழிபட்டிடுவோம்
விதையானவரைப் போற்றிடுவோம்
வீழ்கையிலும் வித்தாவோம்
விருட்சமாக நாம் எழுந்திடுவோம்

வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம்
கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம்

  • நக்கீரன் பாலசுப்பிரமணியம்