(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி)

இராவண காவியம்

பாயிரம்

தமிழ்த்தாய் (தொடர்ச்சி)

6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும்

பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற

இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந்

தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந்

தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத்

தூய சங்கத் திருந்த தொழுதகு

தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.


8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக்

கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும்

நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும்

தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்.

9.கனைத்து முக்கியக் கா்ருக்கு ரென்றுயிர்

இனைத்துத் தேம்பி யிடர்ப்பட லின்றியே

இனித்த வின்சுவை யோடெளி மைப்படுந்

தனைத்த குந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.


10.பூவை யோடு பொலஞ்சிறைக் கிள்ளையும்

காவி னிற்கனி யுங்கனி யச்சொலும்,

மாவும் புள்ளுமம் மாவெனு மங்கலத்

தாவி லாத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை

8. நினைத்த நெஞ்சும் சொல்வர், எனக் கூட்டுக.