காக்கா காக்கா இயல் கொண்டுவா!

 

 

காக்கா காக்கா இயல் கொண்டுவா

காடைக்குயிலே இசை கொண்டுவா
மயிலே மயிலே நடை கொண்டுவா
மானத் தமிழா இனம் கொண்டுவா

சொல்லால் மனதால் மொழி கொண்டுவா
சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா
கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா
காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா

பையப் பைய நம்மொழி கொண்டுவா
பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா
நைய நைய இவ்வன்னியம் வேண்டா
நாறும் ஆங்கிலம் இனி வேண்டா

படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா
பாடல் இனிக்கக் கலி கொண்டுவா
செவிக்கும் தேனாய் புறம் கொண்டுவா
சேர்ந்தே வாழ அகம் கொண்டுவா

புலியே மதியே திறம் கொண்டுவா
புரட்டு இதிகாசம் தான் வேண்டா
மானே மானே மருள் வேண்டா
மானம் பெரிதென சுரம் கொண்டா

பேச்சில் மூச்சில் தமிழ் கொண்டுவா
பேடு பெட்டைக்கும் பயம் வேண்டா
இனியும் நாம் துணிவுடன் இருக்க
இனமானமில்லா காசு கற்கண்டா

சந்திரசேகரன் சுப்பிரமணியம்