தமிழ்ப்புத்தகம் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்புத்தகம் வேண்டும்!
பாப்பா பாப்பா என்ன வேண்டும் சொல்லு
அண்ணா எனக்குப் புத்தகம் வேண்டும்
என்ன புத்தகம் வேண்டும் கேளு
எனக்குத் தமிழ்ப்புத்தகம் வேண்டும்
எந்தப் புத்தகம் கூறு ! கூறு!
பாட்டுப் புத்தகம் வேண்டும் எனக்கு
இந்தா உனக்குப் பாட்டுப் புத்தகம்
அண்ணா அண்ணா நன்றி! நன்றி!
Leave a Reply