குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம்

  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான

கதை சொல்லி,    இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா,  புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்

பங்குனி 19,  2048 / 01.04.2017 முதல் வைகாசி 17, 2048 /  31.05.2017 வரை  நாள்தோறும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

சென்னையில் உள்ள முதன்மையான  கதை சொல்லிகள், துறை சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலை, கைவினை வகுப்புகள் : ஏப்பிரல் 04, 18 மே 02, 24

சதுரங்க வகுப்பு : ஏப்பிரல் 07, 14, 21, 28 மே 07, 12, 19, 26

எழுத்துப் படைப்பு : ஏப்பிரல் 05,  மே 10

படக்கதை : எழுத்துப் பயிற்சி மே 03

மாதிரி ஏவுகணைச் செயற்பாடு :மே 16

தாள்பொம்மை : மே 14, 23

இசை : ஏப்பிரல் 03, 17, 24,  மே 01, 08, 15, 22

ஓவியம் : ஏப்பிரல் 10, 11, 12 மே 29, 30, 31

பொம்மலாட்டம்:  ஏப்பிரல் 30

வினா விடை, புத்தக உரையாடல்: ஏப்பிரல் 22, மே 17

அறிவியல்  செய்முறைகள்:  ஏப்பிரல் 01, 08, 15, 29 மே 06, 13, 20, 27

கதை சொல்லல்:  ஏப்பிரல் 02, 09, 16, 23, 25  மே 05, 09, 21, 28

நினைவுத்திறன் பயிற்சி: ஏப்பி்ரல் 06, 13, 20, 27

ஓகம்:  ஏப்பிரல் 19, 26 மே 04, 11, 18, 25

         இந்நிகழ்வுகளின் பட்டியலைப் பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கோடைக் கொண்டாட்டம் நிகழ்வுகளின் தொகுப்பு