அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு

அன்புடையீர்,

வணக்கம்

சென்னையில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அன்றாடம் எழுத்தாளர்களுடன் வாசகர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படுகிறது.

வாசகர்களைச் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களது விவரங்களுடன், தங்களது எந்தப் புத்தகம் குறித்து வாசகர்களுடன் உரையாட விரும்புகிறீர்கள் என்ற விவரத்தையும்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

வாசகர் சந்திப்பு அன்றாடம் 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெறும். எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும்   ஒரு மணிநேரம் ஒதுக்கித் தரப்படும்.

புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் செய்து தரும் வசதிகள்:

திறந்தவெளியில் அழகுபடுத்தப்பட்ட அரங்கு (40-50 பேர் அமரலாம்.) (புத்தகத்திருவிழா நுழைவாயில் அருகில்)

சந்திக்கும் எழுத்தாளர், அவர் பேசும் நூல் குறித்த அறிமுகம், ஒருங்கிணைப்பு

பங்கேற்கும் மொத்த  எழுத்தாளர்கள் பற்றிய சிற்றேடு

திருவிழாவில் ஒலி பெருக்கிவழி பொதுமக்களுக்கு அறிவிப்பு.

இதழ்கள், ஊடகங்களுக்குத் தகவல்

பாரதி புத்தகாலயம்