அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்
அழிந்து வரும் நிலையில் பேருந்து நிலையம்
கொத்(து)மலை பகுதிக்குட்பட்ட ஃகெல்பொட தோட்டம் ஃகெல்சிரிகம பகுதியில் காணப்படும் பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர்.
இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர். கொத்(து)மலை மண்டலஅவையினால் நிருவகிகப்படும் இந்தப் பேருந்து நிலையத்தை மறுகட்டுமானம் செய்யுமாறு மக்கள் கோரிக்கைவிடுக்கப்பட்ட போதும் இதுவரை காலமும் அவை நடைமுறைப்படுத்தவில்லை.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
படங்கள்: தினக்கதிர்
Leave a Reply