ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம்? – – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
“ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும்” என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயன்றபோது “உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்” என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.
நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட “வெள்ளைக்கார வீரர்களுக்குச்” சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லறை மேம்பாடு வாரியம் அமைக்கப்பட்டு அந்த நினைவிடங்கள் இன்றைக்கும் இந்திய அரசால் தூய்மையாகப் பேணப்படுகிறது.
(முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசியது)
Leave a Reply