உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா: பேராளர் கட்டணமும் புரவலர் நன்கொடையும்
இணையத்தமிழார்வலர்களுக்கு,
வணக்கம்.
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத்தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப்பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் கோலாலம்பூரில் நடத்த வுள்ளது. தமிழ்க்கணிமைஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன.
தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
கட்டுரை வர வேண்டிய நாள் :
ஆனி 31, 2048 / சூலை 15, 2017
பேராளர் கட்டணம்:
கல்லூரி மாணாக்கர்கள் 100 மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு)
உள்நாட்டுப் பேராளர்கள் : (சூலை 30இற்குமுன் பதிவு செய்பவர்களுக்கு) – 150 மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு)
: (சூலை 30இற்குப்பின் பதிவு செய்பவர்களுக்கு)- 200 மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு)
அயல்நாட்டுப் பேராளர்கள் : 60 அமெரிக்கத் தாலர்(தங்குமிடம், உணவு உட்பட)
உதவிக்கரம் நீட்ட விரும்பும் ஆர்வலர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் பின்வருமாறு புரவலர் திட்டம் அறிவிக்கின்றோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கித் தங்களால் இயன்றதொகையினை வழங்கலாம். தேவையெனில் என்னுடன் தொடர்பு கொள்ளவும்வேண்டுகின்றேன்.
சொடுக்குக / Click here : paypal.me/WTIC
புரவலர் நன்கொடை :
வைரம் : மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு) 1000.00
தங்கம் : மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு) 750.00
வெள்ளி : மலேசிய வெள்ளி (இரிங்கிட்டு) 500.00
(புரவலர்கள் தங்கள் விளம்பரப்பதாகைகளைத் தமிழில் அல்லது தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையில் மாநாட்டு அரங்கில் வைக்கலாம்.)
மாநாட்டுச் செயலவை உறுப்பினர்கள்:
தலைவர் :
தனேசு பாலகிருட்டிணன்
(கல்வியியல் தொழில்நுட்ப அதிகாரி, மலேசியா கல்வியமைச்சு)
இணைத் தலைவர்கள்
- முனைவர் இலட்சுமி (இந்தியா)
- பேரா. திருமதி சாந்தி கேசவன்
(துறைத்தலைவர், இந்து நாகரிகத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை )
அறிவுரைஞர்கள் (உலகளவில்)
- மதிப்புமிகு தன்சிரீ(Tan Sri) கேவியசு அவர்கள்
- முனைவர் குமரன்(மலாயா பல்கலைக்கழகம், மலேசியா)
- பேராசிரியர் பத்மநாபபிள்ளை (புலத்தலைவர், காந்தியூர்(கிராமப்) பல்கலைக்கழகம்)
4.மேனாள் பேராசிரியர் முனைவர் காமட்சி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
- முனைவர் கிங் சுடன்(சுல்தான் இட்ரீசு கல்வி பல்கலைக்கழகம்)
- தமிழ்த்திரு ஐயா இலக்குவனார் திருவள்ளுவன்
7. தமிழ்த்திரு தமிழ்செல்வம், (தலைமையாசிரியர், தாய்மொழி நாளிதழ் )
- மதுர நாட்டிய மாமணி திருமதி குருவாயூர் உசா துரை
செயல் இயக்குநர்/ செயலர் : சனார்த்தனன் வேலாயுதம்
கணித்தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்க
அழைக்கப்பெறுகின்றனர்!
நன்றி.
அன்புடன்,
தனேசு பாலகிருட்டிணன்
தலைவர்
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்
+6014-3279982
Leave a Reply