உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா
உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா
உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் மார்கழி 28, 2049 / 12-01-2019 அன்று பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது.
தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர்.
உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக் குழுவினரின் பறை ஒலிக்க அதற்கு சிலர் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டமாக காணப்பட்டது.
Leave a Reply