உலகலாவிய சிறுகதைப் போட்டி
பேரன்புடையீர்,
வணக்கம்.
மலேசியா நாட்டில்
உலகலாவிய சிறுகதைப் போட்டி!
தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு
சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017
மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான(பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு.
மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றம் தமிழ் மொழிக்காகவும், பல்கலைக்கழகம், கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறன்களை மேன்மைப்படுத்தவும், மன்பதைக்காகவும் பல்வேறு அரும்பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றது.
இந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி, இளம் தமிழ்ப் படைப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும் பள்ளி, கல்லுரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும் உலகம் தழுவிய நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணரும் எண்ணத்திலும் உலகம் தழுவிய இச் சிறுகதைப்போட்டி நடத்தப்படுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா அவர்கள் தம் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப் பணபாட்டு மையம் , திருக்குறள் இருக்கை ஆகியவற்றுடன் மலேசிய நாட்டில் இயங்கிவரும் மலேசியத் தமிழ் மணி மன்றம்;, மலேசியத் தமிழ்க் காப்பகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அழகப்பா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் விளைவாக இத்தகு சிறப்பு மிகுந்த மலேசியத் தமிழ் மணி மன்றம் உலக அளவிலான சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்துகிறது. இதில் தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு. தமிழர்களின் வாழ்வியல் முறை, பண்பாடு அடையாளங்கள், தமிழரின் சாதனைகள், வீரவிளையாட்டுக்கள், தமிழரின் மருத்து முறைகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள்,வழிபாட்டு முறைகள் என வரிசைப்படுத்தப்பட்ட இன்னும் பல்வேறு பொருண்மையில் சிறுகதையின் கருவாக அல்லது உட்பொருளாக அமையலாம்.
சிறுகதை எழுத விருப்பமுள்ள படைப்பாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கிணங்க சிறுகதையை எழுதி ஏ4 தாளில் தட்டச்சு செய்து 4 பக்கங்களுக்கு மிகாமல், 12 அளவுள்ள ஒருங்குகுறி அல்லது பாமினி எழுத்துருவில் அல்லது பிற எழுத்துருவில் 1..5 இடைவெளியில் சிறுகதையைத் தருதல் வேண்டும். போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வயது வரம்போ, எந்தவிதப் பதிவுக் கட்டணமோ இல்லை. குறிப்பாக ஒருவர் ஒரு சிறுகதை மட்டும் எழுத அனுமதிககப்படும். சிறுகதையின் முகப்புப் பகுதியில் தங்களின் முழு
முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரியைத் மிக அவசியமாகக் குறிப்பிடவும்.
முழுமைபெற்ற சிறுகதையை ஆனி 16, 2048 / 30.06.2017 ஆம் நாளுக்குள்
மலேசிய நாட்டுப் படைப்பாளர்கள் vaiskaru@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்
இந்தியா மற்றும் பிற நாட்டுப் படைப்பாளர்கள் tamilkanikani@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சிறுகதையை அனுப்ப வேண்டுகிறோம்.
மிகச் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்படும் கதைகளுக்கு
முதல் பரிசு ஆயிரம் மலேசிய வெள்ளி(1000 இரிங்கிட்டு).
இரண்டாம் பரிசு எழுநூற்றைம்பது மலேசிய வெள்ளி (750 இரிங்கிட்டு).
மூன்றாம் பரிசு ஐந்நூறு மலேசிய வெள்ளி (500 இரிங்கிட்டு).
ஆறுதல் பரிசுக்காகத் தெரிவுசெய்யப்படும் சிறுகதை ஒவ்வொன்றுக்கும்
இருநூறு மலேசிய வெள்ளி (200 இரிங்கிட்டு) வழங்கப்படும்.
மிகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையான தகவல் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, பகிரி(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கப்படும்.
சிறுகதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசியத் தலைவர் திரு.சு.வை.லிங்கம்,மலேசியா, தொடர்பு எண் : 0104298234;
மலேசியத் தமிழ் மணி மன்றத் தேசிய உதவித் தலைவரும் சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கி.தங்கராசு மலேசியா, தொடர்பு எண் : 019-2669943, 019-6011569;
சிறுகதைப் போட்டிகளின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத்
தலைவருமான (பொ) முனைவர் போ.சத்தியமூர்த்தி தொடர்பு எண்: 09488616100.
முனைவர் போ.சத்தியமூர்த்தி
இந்திய ஒருங்கிணைப்பாளர்
உலகம் தழுவிய சிறுகதைப் போட்டிகள்
தலைவர் (பொ),தமிழியல்துறை,தமிழியற்புலம்,
உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை -625 021
பேசி : 9488616100 மின்வரி: tamilkanikani@gmail.com
இவற்றைக் காண்க.
http://WWW.THIRUKKURAL.COM CLICK ITHARA PAKKANGAL THIRUKKURRAL SINTHANAI http://WWW.ISSUU.COM TYPE THIRUKKURAL FACE BOOK PROFILE
– சண்முக சுந்தரம் இளமுருகன்