உலகில் மிக நீளமான காவியமான கசார் மன்னரின் திபெத் மொழி சிறப்புப் பதிப்பு, சீனாவின் சில தலைமுறை அறிஞர்களின் 30 ஆண்டுக்கால முயற்சிகளுடன்,  தொகுக்கப் பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. சீனத் திபெத் தன்னாட்சிப் பகுதியின் குமுகாய அறிவியல் கழகத்தினர்  இதனை அறிவித்துள்ளனர்.

tibet03

  மன்னர் கசார் என்னும் திபெத் இனத்தின் வீரக் காவியம், உலகளவில் மிக நீளமான காவியமாகும். இந்தக் காவியத்தில் 120 அத்தியாயங்கள் உள்ளன; 10இலட்சம் பாடல் வரிகளும் 2 கோடிக்கும் அதிகமான எழுத்துக்களும் உள்ளன. எண்ணிக்கையைப் பார்த்தால் உலகில் மிக புகழ் பெற்ற வீர காவியங்களான பண்டைகால பாபிலோன் காவியம் “கிர்க்காமெசு” கிரேக்கக் காவியங்கள் “இலியாத்”, “ஒடிசி”,இந்தியக் காவியங்கள்”இராமாயணம்”, “மகாபாரதம்” ஆகியவற்றின் மொத்த பாடல்வரிகளின் எண்ணிக்கையை விட “கசார் மன்னர் காவியம்” மிகுதியாக உள்ளது.

  இது வரை சீனாவின் பத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் பற்பல அறிஞர்கள் இந்த வரலாற்றுக் காவியத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

 கசார் மன்னரின் வரலாறு இன்றைக்கு உலகின் ஒரேயொரு வாழும் காவியமாகும். ஏனெனில் இன்றைக்கும் நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் சீனாவின் திபெத், உள்மங்கோலியா, சிங்காய் முதலிய இடங்களில் வீரர் கசார் மன்னரின்  அருவினைகளைப் போற்றிப் பாடி வருகின்றார்கள். இத்தகைய நாட்டுப்புற பாடல்களின் கற்பனைக் கதைகளில் இருந்து பெறப்பட்டதே “கசார் மன்னர் காவியம்.”

அற்றைச் சங்கத் தமிழர்களில் இருந்து இற்றை ஈழத்தமிழர்கள் வரையிலான வீர வரலாற்றை யாரும் நெடுங்காவியமாகப் படைக்கலாமே!

kazaar