கணித்தமிழ் எழுத்தரங்கம்
பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம்
1. கணித்தமிழ் எழுத்தரங்கம்
பதின்மூவருக்குப் பரிசுகள்
பங்கேற்பாளர்களுக்குக்
கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள்
தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும் கருத்துகளும் மின்னூலாக வெளியிடப் பெறும். பின்னர் அச்சு நூலாகவும் வெளியிடப் பெறும்.
விதிமுறைகள்:
- முதலில் கணித்தமிழ் எழுத்தங்கம் நடைபெறும். எனவே, கணிணி தொடர்பான கட்டுரைகளை அனுப்ப வேண்டும். (பிற துறை சார்ந்த கட்டுரைகளை அனுப்ப விரும்பினால் துறையின் தலைப்பைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அத்துறைக்கான எழுத்தரங்கம் நிகழும் பொழுது அதில் சேர்த்துக் கொள்ளப்படும்.)
- முன்னரே பிற கருத்தரங்கங்களில் வெளிவந்த கட்டுரைகளை மீண்டும் அனுப்ப வேண்டா. ஆனால், தேவைப்படும் இடங்களில் அக்கருத்துகளைச் சுட்டிக்காட்டலாம்.
- கட்டுரைகள், மேனிலை வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல் படிப்பு முதலான படிப்புகளுக்கான பாடத்திட்டத்திற்கிணங்க இருத்தல் வேண்டும். உரிய இணையத் தளங்கள் வாயிலாகப் பாடத்திட்டங்களை அறிய இயலும். எனினும் உடனடித் தெரிவிற்காகக் கட்டுரைத்தலைப்புகள் தரப்பட்டுள்ளன. ஒருவரே தனித்தனிப் பாடத்தலைப்பபுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் அளிக்கலாம்.
- ‘சொல்லாக்கங்கள் பத்து’ என்னும் பொதுத்தலைப்பில் சொல்லாக்கங்கள் படைத்து விளக்கலாம். ஒருவரே இத்தலைப்பின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் அளிக்கலாம்.
- சிறப்பான கட்டுரைகளுக்குப் பின்வரும் வகையில் பரிசுகள் வழங்கப் பெறும்.
முதல் பரிசு உரூபாய் 5,000
இரண்டாம் பரிசு உரூபாய் 3,000
மூன்றாம் பரிசு உரூபாய் 2,000
ஊக்கப் பரிசுகள் பதின்மருக்குத்
‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழ் ஓராண்டிற்கு இணையத் தளத்தில் படிக்கும் வகையில் ஆண்டுக் கட்டணம் செலுத்தப் பெறும்.
பங்கேற்பாளர்களுக்குக் கணிணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ் வழங்கப் பெறும்.
- படைப்புகளை அனுப்ப விரும்புவோர் முதலில் தங்கள் பெயர், முகவரி விவரங்களையும் கட்டுரைத் தலைப்பு அல்லது தலைப்புகளையும் பின் குறிப்பிடப்படும்மின்வரிக்குத் தெரிவிக்க வேண்டும்.
- இந்தியப் பணம்உரூபாய் 500/- அல்லது இதற்குச் சமமான அயல்நாட்டுப் பண மதிப்பில் பதிவுக்கட்டணத்தை இதற்கெனத் தனித்தளம் உருவாக்கிய பின்னர் செலுத்த வேண்டும்.
தலைப்புகள் இவ்வறிப்பின் பின்னர் உள்ளன..
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: thamizh.kazhakam@gmail.com
கட்டுரைகள் சீருரு வடிவில் அனுப்பப்பட வேண்டும். அச்சு வடிவில் வெளியிடும் பொழுது பாமினி எழுத்துருவில் அனுப்பி வைக்கக் கேட்கப்படும்.
கட்டுரையாளர் தற்குறிப்பையும் ஒளிப்படத்தையும் கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரைத் தலைப்புகள் அனுப்பிப் பதிவதற்கான இறுதி நாள்:
கார்த்திகை 1, 2046 / நவ. 17, 2015
கட்டுரைகள் அனுப்புவதற்கான இறுதி நாள்:
கட்டுரைகள் வரவர, அகரமுதல தளத்தில் வெளியிடப்பெறும்.
இறுதி நாள் பின்னர்த் தெரிவிக்கப்பெறும்.
இங்குள்ள தலைப்புகள் அல்லது பாடத்திட்டத்தின்படியான பிற தலைப்புகளில் கட்டுரை அளிக்கலாம். புதிய தலைப்புகளைத் தெரிவிப்பின் அவையும் பட்டியிலில் சேர்க்கப்படும்.
இப்பொழுது பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழில் எழுத இடர்ப்பாடு ஏற்படின் இயன்றவரை எழுதிவிட்டுத் தமிழ்அறிந்த பிறர்வழி அதனைச் செம்மைப்படுத்தி அனுப்புதல் நன்று.
ஒருவரே எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம். பதிவுக்கட்டணம் ஒரு முறை செலுத்தினால் போதும்.
கட்டுரையாளர் நடையில் தலைப்புகள் அமைய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலேயே கட்டுரைத் தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்வழிக்கல்வி செம்மையாக விளங்கவும்
துறைதோறும் செந்தமிழ் நிலைக்கவும்
படைப்புகளை அனுப்பி வைக்குமாறு படைப்பாளர்களை வேண்டுகிறோம்.
தங்கள் தொடர்புடைய தளங்கள், வலைப்பூக்கள், முகநூல் முதலான பொதுத்தளங்கள், மடலாடல் குழுக்களில் பகிருமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
அனைவரின் ஒத்துழைப்பை நாடும்
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர்
கணிணித்தமிழ் எழுத்தரங்கம்
[ பின் குறிப்பு இறுதி நாள் மாற்றப்பட்டு இதில் குறிக்கப்பெற்றுள்ளது.]
தலைப்புகள்
- .NET FRAMEWORK
- 6C framework
- ACTIVE DATABASES
- AD-HOC AND SENSOR NETWORKS
- Algorithm
- Approaches to design E-Learning
- Arrays : Initialization & Declaration
- ARTIFICIAL IMMUNE SYSTEMS
- BASE CLASS LIBRARIES AND DATA MANIPULATION
- Basic Organization of a Computer
- Bayes Optimal Classifiers
- Biological Data Integration System.
- Business models around Clouds
- C# ADVANCED FEATURES
- C# LANGUAGE BASICS
- CHALLENGES OF PARALLEL PROGRAMMING
- Cloud Architecture
- Cloud-definition, benefits, usage scenarios, History of Cloud Computing
- COLLABORATING USING CLOUD SERVICES
- Communication as services.
- compilation and linking processes – Constants, Variables –
- COMPLEX QUERIES AND REASONING
- Computer-based technologies –
- Computer-mediated communication (CMC)
- Data format and processing
- Data mining
- Data Types
- Data warehousing Components
- DATABASE AND WEB SERVICES
- Database as a Service
- DATA WAREHOUSING AND DATA MINING IN BIOINFORMATICS
- Decision Making and Branching Looping statements – solving simple scientific and statistical
- Design Issues and Classifications of uni-cast and multicast Routing Protocol
- DESIGN OPTIMIZATION
- E-Learning
- E-Learning cycle
- E-Learning framework
- E-LEARNING STRATEGY
- E-Learning Tools
- E-Learning types – challenges and opportunities
- ELEMENTARY CRYPTOGRAPHY
- Evolution of Decision Support Systems
- EVOLUTIONARY COMPUTING
- Expressions using operators in ‘C’
- Flow Chart.
- Function – definition of function – Declaration of function –
- fundamentals & structure of a ‘C’ program
- FUNDAMENTALS OF PARALLEL COMPUTING
- Generation and Classification of Computers
- guidelines to solve issues in E-Learning
- Hardware Tuning
- Infrastructure as a Service
- INFRASTRUCTURE ESTABLISHMENT AND NETWORK DATABASE
- Initialization
- Introduction –
- INTRODUCTION AND MAC PROTOCOLS
- Introduction to ‘ C’ programming
- issues in Clouds
- Major Players in Cloud Computing
- Managing Input and Output operations
- MEDIUM ACCESS AND TELECOMMUNICATIONS
- MICRO ARRAY ANALYSIS
- M-Learning- problem based learning
- MOBILE AND PERVASIVE COMPUTING
- MOBILE APPLICATION DEVELOPMENT
- MOBILE APPLICATIONS
- MOBILE NETWORK AND TRANSPORT LAYERS
- MODELING FOR BIOINFORMATICS
- Monitoring and Tuning Activities
- Monitoring as a Service
- MPI PROGRAMMING
- Need for Bioinformatics technologies
- Need for logical analysis and thinking
- Need for structure data type
- Number System (Binary, Decimal, Conversion & Problems.)
- On line E-Learning technologies
- One dimensional and Two dimensional arrays.
- Overview of Bioinformatics technologies Structural bioinformatics
- PARALLEL AND DISTRIBUTED DATABASES
- Pass by value & Pass by reference
- PATTERN MATCHING AND VISUALIZATION
- PERFORMANCE TUNING
- Platform as a Service
- Pointers and arrays – Example Problems.
- Pointers arithmetic
- Pre-processor directives.
- PRINCIPLES OF E-LEARNING
- Problem formulation – Problem Solving –
- PROGRAM SECURITY
- PROGRAMMING HETEROGENEOUS PROCESSORS
- Pseudo code
- quantum algorithms
- Quantum computing
- Recursion & Pointers –
- Role of Structural bioinformatics
- Schemas for Multidimensional Database
- Secondary resources and applications
- Security in Clouds & Cloud security challenges
- SECURITY IN DATABASES
- SECURITY IN NETWORKS
- SECURITY MODELS AND STANDARDS
- SENSOR NETWORKS AND NETWORKING SENSORS
- Service providers
- SHARED MEMORY MODELS AND OPEN-MP PROGRAMMING
- Simple programs- sorting- searching – matrix operations.
- Software as a Service
- SPATIAL, TEXT AND MULTIMEDIA DATABASES
- SQL tuning
- Storage classes
- String operations – String Arrays.
- structure definition & Structure declaration
- Structure within a structure
- STRUCTURES AND UNIONS 9
- TEMPORAL AND OBJECT DATABASES
- TRANSPORT LAYER AND SECURITY ISSUES
- TROUBLESHOOTING
- Types of Cloud services
- Types of Clouds
- Union – Programs using structures and Unions
- VIRTUALIZATION FOR CLOUD
- visual communication techniques
- WIRELESS NETWORKS
நான் கணித்தமிழ்ச்சங்கத்தில் சேருகின்றேன்.