முத்திரை, கனடியத்தமிழர்பேரவை ; muthirai-banner-canadian-tamilperavai நிதிசேர் நடை02 ; nithisernadai_canada02 நிதிசேர் நடை01 ; nithisernadai_canada01

கனடியத் தமிழர் பேரவையின் 8ஆவது ஆண்டு நிதி சேர் நடை

  கனடியத் தமிழர் பேரவையின் 8 ஆவது ஆண்டு நிதி சேர் நடை  ஆவணி 26, 2047 / செட்டம்பர் 11, 2016  ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. காபரோ தாம்சன்   நினைவுப் பூங்காவில் (Thomson Memorial Park)) நிகழ்வு காலை 9.00 மணிக்குத் தொடசங்கியது.

  இவ்வாண்டுக்கான நிதிசேர் நடை ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை‘ என அழைக்கப்படவிருக்கும் நல்லின மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை, மட்டக்களப்பு படுவான்கரைப்  பகுதியில்  உருவாக்க நடத்தப்பட்டது.

முன்னாள் போராளிகள், போரினால் அங்கங்களை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், கணவரை இழந்த பெண்கள் என ஏராளமானோருக்குக் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’த் திட்டத்தினால் பலன் பெறுவதற்கு ஏற்றவகையில் பண்ணை நடத்தப்பட்டது.

இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளவும், கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை குறித்த விவரங்களைத் தரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் வியாழேந்திரன் கனடா வந்தார்.

புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் சீரிய திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்டுச் செய்யப்படும்போது பலன்கள் பெரிதாக இருக்கும்.

அவ்வகையில் கனடா தமிழர் பேரவையின் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை’தொலைநோக்குடன் நீண்ட காலப் பலன்தரும் வகையில் அமைந்தது.

இத்திட்டத்தின் வழி நமது வறிய மக்கள் பலன்பெறும்போது அவர்கள் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் அப்பகுதிகளில் வாழக்கூடிய  வாய்ப்பு உருவாகிறது.

இவ்வாறாக அவர்கள் அப்பகுதிகளில் குறிப்பாக எல்லைப்  பகுதிகளில் வாழ்வார்களேயானால் எம் நிலங்கள் பறிபோகும் அவலம் நேராது.

இதன்மூலம் எமது நிலங்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தரவு :

தங்க ஆதவன்

http://worldtamilforum.com/america/ctc_canada_fund_walk/

http://news.lankasri.com/canada/03/109111