கவிஞர் செயபாலன் இன்று விடுதலை செய்யப்படலாம்
மாங்குளத்தில் தளையிடப்பட்ட கவிஞர் செயபாலன் இன்று வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பயங்கரவாதத் தடுப்புக் காவலரால் கொண்டு செல்லப்படுகிறார். ‘தினக்கதிர்’ இதழ் சார்பில் செயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை இன்று விடுதலை செய்வதாகக் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொண்டு செல்லப்படும் கவிஞர் செயபாலன் சிறிலங்கா குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது குடிவரவு அதிகாரிகள் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வார்களா என்பது தெரியவில்லை.
அவர் இன்று விடுவிக்கப்பட்டால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு அதிகாரிகளால் பணிக்கப்படலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply