கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.

தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர்.

விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன் பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்ணன் முதலான சாதனையாளர்களுக்கான விருதுகளையும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மாஃபா பாண்டியராசன் வழங்கி வாழ்த்திப்பேசினார்.

நிரம்பி வழிந்த நூலக அரங்கமும், நிகழ்ச்சிகளும் நிறைவாக அமைந்திருந்தன.