முத்திரை-வானம்பாடிக்கவிஞர்சங்கம் : muthirai_vaanambaadisangam

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!

பேரன்புடையீர் வணக்கம்.

  எதிர்வரும்  ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும்  வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புகின்ற கவிஞர்கள் உடனே தங்களின் பெயர்களைக் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

‪‎பரிசு விவரம்:

முதல் பரிசு : 10  பணவெடை(கிராம்) தங்கம். [24  கழஞ்சு(கேரட்)]

இரண்டாம் பரிசு : 5 பணவெடை(கிராம்) தங்கம் [24  கழஞ்சு(கேரட்)]

மூன்றாம் பரிசு : 3 பணவெடை(கிராம்) தங்கம் [24  கழஞ்சு(கேரட்)]

‪தலைப்பு : நஞ்சை உண்டு ! புஞ்சை உண்டு !

‪‎விதிகள் : 25 லிருந்து 30 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். வேளாண்மை, பயிர்த்தொழிற் குடில், உழவன்-உழத்தி போன்ற சிறப்புகள் மட்டும் இடம்பெற வேண்டும். தனி மனிதத்தாக்குதல், கட்சி, மதம், சாதி அடையாளம் இல்லாமல் இருக்கவேண்டும். படிக்க போகும் கவிதையின் அச்சு வடிவம்  படி எடுத்து வரவேண்டும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

(குறிப்பு: குறள் சொல்லுங்கள்! பரிசு வெல்லுங்கள்! என்ற குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெற உள்ளதும் அதில் கலந்துகொள்ள இருக்கின்ற குழந்தைகளுக்கு  நூறாயிரம் பணப்பரிசும் ”மணவயல்” திருமதி காந்திமதி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது)

‪  காணுரை(whats app) தொடர்புக்கு

திரு. செம்பொன்மாரி கா.சேது – 97801299

திரு. தஞ்சை முருகானந்தம் – 66731628

திரு. சிவசங்கரன் – 69301871

‪‎வளைகுடா வானம்பாடிக்  கவிஞர்கள் சங்கம், குவைத்து