வவுனியா-திருமண உதவி : padam_thirumanauthavi_vavuniya

‘காணாமல் ஆக்கப்படுதலால்

பாதிக்கப்பட்டுள்ள உறவின்

திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!

 ‘ஆள்கடத்தல்-காணாமல் ஆக்கப்படுதல்’  நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு & திருமதி பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட  மக்கள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர்.

 இவர்களின் குடும்ப நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம்(20,000) உரூபாய் நிதியை, வவுனியா மாவட்டக்குடிமக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர்  ஆடி 15, 2047 / 30.07.2016 வெள்ளிக்கிழமை தமிழீழ நேரம் இரவு 11.00 மணிப்பொழுதில்  திரு. & திருமதி. பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினரின் இல்லம் ஏகி கையளித்தனர்.

  ஏலவே எதாடக்கச்செலவுகளுக்காக முதல்கட்டமாக, அமெரிக்காவில் வசித்துவரும் உயர்திரு. அம்பலவாணர் குடும்பத்தினர், தமிழர்குரல் (Tamils-voice.Com) செய்திச்சேவை ஊடாக, மனமுவந்தளித்த இருபத்து ஐந்தாயிரம் (25,000)  உரூபாய் நிதி  ஆனி 25, 2047 / 09.07.2016 சனிக்கிழமை அன்று திரு.திருமதி.பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.