பன்னாட்டு  வல்லுநர் குழு-கூட்டம்02 :MAP02

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் :

ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம்

[Monitoring Accountability Panel (MAP)]   தெரிவிப்பு !

  ஐ.நா. மனித உரிமையவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை எனப் பன்னாட்டு  வல்லுநர் குழு ஐ.நா. மனித உரிமை யவையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

  சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு  வல்லுநர்கள் குழுவே Monitoring Accountability Panel (MAP)  இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

 பன்னாட்டு நீதிபதியாகவும்,  உசாவல்- மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற  செப்ரி இரொபர்ட்சன்(Geoffrey Robertson) தலைமையில் இடம்பெற்றிருந்த  துணை மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்ப்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு உசாவல் மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான  அறிவுரைஞராக இருக்கின்ற  ஃகீதர்  இரியான்(Heather Ryan).

  சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29 ஆம் நாளன்று மனித உரிமையவை ஆணையாளர் செயிட்  இராட்டு அல்அசேன்  அவையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்தப் பன்னாட்டு  வல்லுநர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

  ஐ.நா. மனித உரிமையவைக்குச் சிறிலங்கா வழங்கியிருந்த வாக்குறுதிகளில்  உறுதியான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்த இந்த  வல்லுநர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.

நாதம் ஊடகசேவை

காணொளிகள் :

 https://youtu.be/Er0CDjHoHdw

 https://youtu.be/yUHgXRgAPhE

https://youtu.be/2PpwWqk54b0

https://youtu.be/EO-ld1t7HcI

https://youtu.be/y5SnOtCv55A

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]