தலைப்பு- தேவகோட்டை,விளையாட்டுவிழழ02 : thalaippu_devakottai_vilaiyaattuvizhaa02

கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது

காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை

 

 தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர்  கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார்.

  விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார்  இரமேசு சிறப்புரையில், “சிறு அகவையிலேயே விளையாட்டில் ஆர்வமாக இருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவதுடன், தோல்வியுற்றாலும் போட்டியில் பங்கு கொண்டதற்கு எண்ணிப் பெருமைப்படுங்கள். போட்டியில் பரிசு பெற்றாக வேண்டும் என்பது  முதன்மை இல்லை. பங்கு பெற்றாய் என்பதுதான் முதன்மை. எனவே அனைவரும் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுங்கள். எந்தக் காலத்திலும்  கையூட்டு வாங்கவும் மாட்டோம், கையூட்டு கொடுக்கவும் மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த உறுதியுடன்   இளம்  அகவையில் இருந்து உங்கள் வாழ்கையை நல்ல முறையில் தொடங்குங்கள்” என்றார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கும் ஆசிரியர்களுக்கும் விருதுகளை வழங்கினார்.

 

  விளையாட்டுப் போட்டிகளில்  வாகைசூடியவர்கள்:

ஆண்கள் பிரிவு

எட்டாம் வகுப்புக்கான  கோணி ஓட்டப்பந்தயப் போட்டி:

முதலிடம்:  (இ)யோகேசுவரன்

இரண்டாமிடம்:  கிருட்டிணகுமார்

ஏழாம் வகுப்புக்கான இடம் மாற்றுதல் போட்டி:

முதலிடம்: சாய் புவனேசுவரன்

இரண்டாமிடம்:  பரத்து குமார்

 ஆறாம் வகுப்புக்கான ஓட்டப் பந்தயம்

முதலிடம்: த.இராசேசு

இரண்டாமிடம்:  பா.இராசேசு

  ஐந்தாம் வகுப்புக்கான  ஓட்டப் பந்தயம்

முதலிடம் : கார்த்திகேயன் & கசேந்திரன்

நான்காம் வகுப்புக்கான தவளை ஓட்டம்

முதலிடம்: ஐயப்பன்

 இரண்டாமிடம்: சபரி

 மூன்றாம் வகுப்புக்கான குதிகாலில் நடத்தல் போட்டி

முதலிடம்: கிசோர்குமார்

இரண்டாமிடம்: ஈசுவரன்

இரண்டாம் வகுப்பில்

முதலிடம்: புகழேந்தி

இரண்டாமிடம்: வெங்கட்ராமன்

முதல் வகுப்பில்  காற்றூதி(பலூன்) உடைத்தல் போட்டி

முதலிடம்: ஆகாசு

இரண்டாமிடம்:  சத்தியா

 

பெண்கள் பிரிவு

எட்டாம் வகுப்புக்கான தண்ணீர்க்குப்பி நிரப்புதல் போட்டி

முதலிடம்: தனம்

இரண்டாமிடம்: இராசஇலட்சுமி

 ஏழாம் வகுப்புக்கான எலுமிச்சை-கரண்டி போட்டி

 முதலிடம் : பரமேசுவரி

இரண்டாமிடம்: கார்த்திகா

 ஆறாம் வகுப்புக்கான நொண்டி  ஓட்டப்பந்தயம்

முதலிடம்:  செனிபர்

இரண்டாமிடம்; காவியா

 ஐந்தாம் வகுப்புக்கான இடம் பிடித்தல் பந்தயம்

முதலிடம்: மாதரசி

இரண்டாமிடம்: சந்தியா

நான்காம் வகுப்புக்கான பந்து உருட்டுதல் போட்டி

முதலிடம் : வள்ளியமை

இரண்டாமிடம்: சிரேகா

மூன்றாம் வகுப்புக்கான முன்காலில்  நடத்தல் போட்டி

முதலிடம்: சனசிரீ

இரண்டாமிடம்: மகாலெட்சுமி

 இரண்டாம் வகுப்புக்கான நொண்டி ஓட்டம்

 முதலிடம்:  திவ்யதர்சினி

இரண்டாமிடம்: தேவதர்சினி

 முதல் வகுப்புக்கான காற்றூதி(பலூன்) உடைத்தல் போட்டி

முதலிடம்: அனுசியா

இரண்டாமிடம்: திவ்யசிரீ

  வாகைசூடியமாணாக்கர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 

ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியை முத்து லெட்சுமிக்கும், ஆசிரியர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர் கருப்பையாவிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 நிறைவாக மாணவிகள் சௌமியா,பரமேசுவரி, காயத்திரி, தனலெட்சுமி ஆகியோர் பேசினார்கள். பெற்றோர்கள் கற்பகம்,சத்தியா, இலெட்சுமி ஆகியோர் பேசினார்கள். நிறைவாக ஆசிரியர்  சிரீதர் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இலெ .சொக்கலிங்கம்

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/