சாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார். 1997இல் சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது.
கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக எழுத்துப்பணிக்கு ஓய்வு அளித்திருந்தார். எழுத்துப் பணிக்கு முழு ஓய்வளிக்கும் வகையில் உடலநலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நெல்லை பேட்டையில் நடக்கிறது.
இவரைப்பற்றிய குறிப்புகளை விக்கிபீடியாவில் காண்க.
பாளையம்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி, காட்சித் தொடர்பியல் துறை ஆசிரியையும் மாணவர்களும் இவரைச் செவ்வி கண்ட காணுரை
Leave a Reply