68suddenshops

மலைச்சாலைப் பகுதிகளில்

சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள்

ஏற்படும் கண்டம்(அபாயம்)

  தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலைப் பகுதி உள்ளது. இப்பகுதி மிக முதன்மையான சாலை இணைப்புப் பகுதியாகும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து வரும் ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் பிரிவு இதுதான். எனவே தமிழகம், பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் இச்சாலையில் பயணம் செய்கின்றனர்.

  இன்னும் ஓரிரு வாரங்களில் கோடைப்பருவம் தொடங்க உள்ளதால் இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி இப்பொழுது சாலையின் இருபுறமும், சாலை சந்திப்பிலும் திடீர் திடீர் எனக் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இக்கடைகளில் வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசனி, சுவைநீர், இளநீர் எனக் கடைகள் வைக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும்போது ஊர்திகள் வருகையில் பயணிகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 எனவே நெடுஞ்சாலைத்துறையினர் துயர நேர்ச்சிகள் ஏற்படும் முன்பே சாலையோரக்கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

68vaigaianeesu