bharathy_poatti

பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில்

சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான

10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம்.

நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம்.

கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும்.

போட்டியில், முதல் பரிசாக உரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக உரூ.1000 வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் பதிப்பகத்தார், தங்கள் நூலின் மூன்று படிகளை சூலை 20 ஆம் நாளுக்குள்   பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, பாரதி அச்சகம், தேசிய நெடுஞ்சாலை அருகில், கம்பம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். மேலும், பாரதியின் தலைப்பாகை வைத்து பரிசுத் தொகையுடன் சான்றிதழ்கள் அளித்துச் சிறப்பிக்கப்படுவர்.

இது தொடர்பான விபரங்களுக்கு 93626 50100 என்ற பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனப் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் பாரதன் தெரிவித்துள்ளார்.