தலைப்பு-த.த.இ.-சிறுகதைப்போட்டி : thalaippu_thanithamizh_chirukathaipoatti

தனித்தமிழ் இயக்கம் நடத்தும்  

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

மொத்தப்பரிசு உரூபா. 3000.00

பரிசு வழங்குபவர் பொறிஞர் இரா.தேவதாசு அவர்கள்

  கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 20.9.2016

முகவரி

முனைவர் க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம் 66.மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605009-

தொ.பே 0413-2247072,9791629979

நெறிமுறைகள்

  1. அ4 தாளில் 4 பக்கம் கொண்ட குமுகாயக் கதைகள் பிறமொழிச்சொற்கள், பெயர்கள் கலவாத  நடையில் எழுதப்பெற வேண்டும்.

 2. கதையின் இரண்டு படிகளை அனுப்ப வேண்டும் ஒருபடியில் மட்டும் பெயர் முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின் எந்தப்பக்கத்திலும் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது. இருந்தால் பரிசுக்கு அவை தேர்வாகா

 3. மொழிபெயர்ப்பு, தழுவல், முன்னரே வெளிவந்தவை, பரிசுபெற்றவை ஏற்கப்படா.

4. வெளியீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் வெல்லும் துாயதமிழ் மாதஇதழில் வெளியிடப்படும்.  வேண்டுவோர் தொகை அனுப்பி,  அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

 5. நடுவர் தீர்ப்பேஇறுதியானது.

6. சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி, அண்மை ஒளிப்படங்கள், கதைக்கேற்ற ஓவியங்கள் அனுப்பலாம்.

இரண்டு முதல் பரிசுகள் உரூபா. 750.00=1500.00

    இரண்டு இரண்டாம் பரிசுகள் உரூபா.  500.00=1000.00

  இரண்டு மூன்றாம் பரிசுகள் உரூபா. 250.00=500.00

இவண்

thamizhamallan02

க.தமிழமல்லன்,

தலைவர்,

தனித்தமிழ் இயக்கம்,

புதுச்சேரி-9