“தமிழக மக்கள் முன்னணி” தொடக்கம்
“தமிழக மக்கள் முன்னணி”
தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன.
- தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
2.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கழகம்
3.தென்மொழி இயக்கம்
4.தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
5.தமிழர் தன்மானப் பேரவை
6.தமிழர் உரிமை இயக்கம்
7.தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
8.புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவை
9.தமிழர் விடுதலை கழகம்
10.தமிழ்நாடு விடுதலை புலிகள்
11.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
12.பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்
13.இளந்தமிழர் பாசறை
ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து தமிழக மக்கள் முன்னணியை உருவாக்கி உள்ளன.
இந்த முன்னணியின்,
தலைவராகத் தோழர் அரங்க குணசேகரன்,
துணைத் தலைவர்கள் பாவலர் தமிழேந்தி, திரு.மா.பூங்குன்றன்,
பொதுச் செயலர் தோழர் பொழிலன்,
இணைச் செயலாளாராகத் தோழர்கள் தங்க.குமரவேல், சுப்பு.மகேசு,
பொருளாளராகத் தோழர். தோழர்.செ.குணசேகரன்,
கொள்கைப் பரப்புச் செயலாளராகத் தோழர் விடுதலைச் செல்வன்
ஆகியோர் பொறுப்பாளர்களாகத் தேர்வு செய்ய பெற்றனர்.
தமிழக மக்கள் முன்னணியின் முதற்கட்ட செயற்பாடாகத் தமிழ்நாட்டு வளங்களைச் சூறையாடும் இந்திய, பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம்! என்னும் முழக்கத்தின் அடிப்படையில்
மித்தேன், அணுமின் நிலையங்கள், நியூட்டிரினோ, கெயில் உள்ளிட்டுத் தமிழகத்தைப் பாழாக்கும் தொழில்களை மறுத்திடவும், நிலக்கரி, இரும்பு, தாதுமணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை எதிர்த்தும்,
கடல்வளம், காடுவளம், நீர்வளம், நிலவளம் ஆகியவற்றைப் பறித்தெடுத்துச் செல்லும் இந்திய, பன்னாட்டுக் கொள்ளைகளைத் தடுத்தும் எதிர்வரும்மாசி 16, 2046 / பிப்பிரவரி 28ஆம் நாள் தஞ்சையில் மிகப் பெரிய பேரணியை நடத்தஇருக்கிறது. பேரணியின் இறுதியில் அடுத்தக் கட்டப் போராட்டம் அறிவிக்கப்பெறும்.
தொடர்புக்கு
~~~~~~~~~~~
பொதுச் செயலர் தலைவர்
தோழர் பொழிலன் அரங்க.குணசேகரன்
8608068002 9047521117
Leave a Reply