தலைப்பு-தமிழ்முனைவர் குழுமம் : thalaippu_thamizhmunaivarkuzhumam

தமிழ் முனைவர் குழுமம்

வணக்கம்.

தமிழில் உயர்கல்வியை மேம்படுத்தும் பொருட்டு ஒரு முகநூல் குழுவைத் தொடங்கியுள்ளேன். குழுவின் நோக்கம்:

1) தமிழகக் கல்லூரிகளில் உள்ள முனைவர், ஆய்வுநிறைஞர் (எம்.பில்.) பட்ட வகுப்பு மானவர்கள் ஆய்விற்கு உதவுதல்

2) பல்வேறு கல்லூரி, பல்கலைகழகப் பாடத் திட்டங்களை மேம்படுத்த நெறியுரை வழங்குதல்

3) தமிழகத்தில் ஆய்வுகள் அடிப்படையிலான உயர்கல்வி அமைய முயற்சி செய்தல்

 

குழுவில் இணையப் பின்வரும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள்!

 

1) முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

2) இயற்பியல், பொறியியல், தமிழ், மொழிகள், வரலாறு முதலான பலதுறைகளில் உள்ள முனைவர் பட்டம் பெறாத தொழில் நெறிஞர்கள், அறிஞர்கள். உங்கள் நடைமுறை அறிவு, கல்வித்துறையின்  படிப்பறிவை மேம்படுத்த உதவும் என்பதால் உங்களையும் வரவேற்கிறோம். கல்வித்துறையை மேம்படுத்த துறைசார் நெறியுரை சொல்ல, விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

3) அனைத்துக் கல்லூரி, பல்கலைகழகப் பேராசிரியர்கள்

4) அனைத்துக் கல்லூரி, பல்கலைகழக முனைவர், இளமுனைவர் பட்ட மாணவர்கள்

5) முனைவர், இளமுனைவர் பட்டம் பெற விருப்பம் உள்ள முதுகலைப் பட்ட மாணவர்கள்

  தமிழில் உயர்கல்வியை மேம்படுத்த உதவ இக்குழுவில் இணைய இத்தகுதிகள் உள்ள அனைவரையும் அழைக்கிறேன்.

 

செல்வன்

தமிழ் முனைவர் குழுமம்

 holyape@gmail.com